உலக சிறுவர் தினத்தையொட்டி மாணவர்களிடையே போட்டிகள்

உலக சிறுவர் தினத்தை யொட்டி மாணவர்களிடையே சித்திரம் மற்றும் சுவரொட்டிப் போட்டியை நன் நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் நடத்தவுள்ளது.

 
இத் தினத்தில் மாணவர்களின் அழகியல் கலைத்திறன்களை மேம்படுத்தும் முகமாக 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு "பெற்றோரின் பாதுகாப்பு எனது எதிர்காலமாகும்' என்னும் தலைப்பிலும் 6-10 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களிடையே '25 அண்டுகளில் நாம் காணும் இளமை" என்னும் தலைப்பிலும் 11-13 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களிடையே "சிறகுகள் திடமான பருவம் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
 
வரையப்பட்ட சித்திரம் அல்லது சுவரொட்டியை பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலின் படி ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஆணையாளர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம் பீ.பகுதிஇ 3 ம் மாடிஇ செத்சிரிபாயஇபத்திரமுல்ல என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.