உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் புகைப்பொருட்கள் தடை.

  உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் புகைப்பொருட்கள் தடை.

புகைத்தல் ஒழிப்பு தினத்தில் புகைத்தல் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்க தீர்மாணித்துள்ளதாக யாழ்.மருத்துவ சங்க செயலாளர் வைத்திய கலாநிதி சுரேந்திரகுமார் தெரிவித்தார்

   உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்    -சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தில் சகலரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அன்றைய தினம் புகைத்தல் பொருட்கள் விற்பதற்கு தடைவிதிக்கத் தீர்மாணித்துள்ளோம்.   யாழ்.மாவட்டத்தில் மட்டுமின்றி பல இடங்களிலும் தற்போது இளம் சந்ததியினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதுடன் புற்றுநோய் மற்றும் சுவாச நோய் போன்றவற்றை இளவயதிலேயே அனுபவிக்கும் நிலமையைக் காணக்கூடியதாகவுள்ளது.   இவ்வாறான புகைத்தல் செயற்பாடுகளை இல்லாது ஒழிப்பதற்காக இந்த வருடம் 'புகையிலைப் பதார்த்ங்களுக்கான வரியை உயர்த்துதல்' என்ற தொனிப் பொருளில் அமைந்துள்ளதுள்ளதுடன் புகைப் பொருட்களுக்கான வரியையும் அரசாங்கம் உயர்த்தவும் தீர்மாணித்துள்ளதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் -