ஊரெழு சோ்ந்த இளம் யுவதி கிணற்றில் வீழ்ந்து பலி

ஊரெழு  சோ்ந்த  இளம் யுவதி கிணற்றில் வீழ்ந்து பலி

நேற்று முன்தினம் ஊரெழு கிழக்கில் இளம் யுவதி ஒருவா் கிணற்றில் வீழ்ந்து மரணமானாா்.

 குறித்த யுவதிக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கிணற்றில் தண்ணீா் அள்ளும் போது யுவதிக்கு வலிப்பு வந்திருக்கலாம் எனவும் உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.

வீட்டில் உள்ளவா்கள் வெளியே போயிருந்த நேரமே கிணற்றில் யுவதி வீழ்ந்துள்ளாா். வெளியே போனவா்கள் திரும்பி வந்த போது யுவதியைக் காணாது தேடியதாகவும் யுவதி கிணற்றில் வீழ்ந்திருந்ததைப் பாா்த்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு போனபோது யுவதி இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரெழு கிழக்கைச் சோ்ந்த நந்தா சின்னத்தம்பி எனும் 26 வயது யுவதியே மரணமானவராவாா்