ஊர்காவற்துறையில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஊர்காவற்துறையில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்.ஊர்காவற்துறை பிரதேச வீடொன்றில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர் 42 வயதுடைய ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.