ஓகஸ்ட் 23 இல் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில்

 ஓகஸ்ட் 23 இல் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பழைய முறைமைக்கு அமையவே நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

 

 
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஒரு வினா பத்திரத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்திருந்தது. 
 
எனினும் பழைய முறைமைக்கு அமைய இந்த ஆண்டு பரீட்சையை நடத்துவதற்கு, பின்னர் பரிந்துரை செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.