எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் காங்கேசன்துறை வரை யாழ் தேவி

எதிர்வரும் ஜனவரி மாதம்  முதல் காங்கேசன்துறை வரை   யாழ் தேவி

யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து ரயில் பாதையின் புனரமைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி யாழ் தேவியின் சேவை யாழ்ப்பாணம் வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.