எதிர்வரும் 31ல் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

எதிர்வரும் 31ல் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பிரதேசசெயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன் தலைமையில் புகைத்தல் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.     

 அதில் சமுர்த்தி வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினர்,சமுர்த்தி மகாசங்க நிறைவேற்று உறுப்பினர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள்  ,தென்மராட்சி பிரதேச பாடசாலை அதிபர்கள்  ஆகியோர்  கலந்து  கொள்ளவுள்ளதாக தென்மராட்சி திவிநெகும மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் க.விக்னேஸ்வரன் தெரிவித்தார். -