எரிபொருள்-விலை-தொடர்பில்-முறையிட-தொலைபேசி-இலக்கங்கள்

எரிபொருள்-விலை-தொடர்பில்-முறையிட-தொலைபேசி-இலக்கங்கள்

எரிபொருள்கள் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலங்கங்களை மின் சக்தி எரிசக்தி அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

மின் சக்தி எரிசக்தி ராஜாங்க அமைச்சர்  அதுகுறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். கடந்த நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள்களுக்கான விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் பழைய விலைக்கு எரிபொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே இதுகுறித்த முறைப்பாடுகளை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைப்பாடுகளை 0115243243, 0115455130, 0115455251, 0115455254 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக பதிவுசெய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.