ஏழாலையில் நடந்தது என்ன? அரசியல் முரண்பாடால் குழந்தைகளை பலி கொடுக்க ஆயத்தம்

ஏழாலையில் நடந்தது என்ன? அரசியல் முரண்பாடால் குழந்தைகளை பலி கொடுக்க ஆயத்தம்

 யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கையில்,

பாடசாலை கிணறு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கழிவு எண்ணெய் கலந்து உள்ளது எனும் சந்தேகத்தால் மூடபட்டு உள்ளது. அதனால் பாடசாலை மாணவர்கள் பிரதேச சபையினால் வைக்கபப்ட்டுள்ள தண்ணீர் தாங்கியில் இருந்தே நீரினை பருகி வந்தனர்.

நேற்றய தினமும் காலை உடற்பயிற்சி மற்றும்  காலை பிரார்த்தனை முடிய மாணவர்கள் வழமை போன்று நீரினை அருந்தி உள்ளனர் காலை 9 மணியளவிலையே நீரில் விஷம் கலந்துள்ளமை தெரியவந்து மாணவர்களை உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தோம்.

பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவித்தார்.

அதேவேளை வடமாகாண மாகாண முதலமைச்சர் இது தொடர்பான விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ள வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.

அதனை அடுத்து பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக .தெரிவிக்கபபட்டது

தற்போது மாணவர்களுக்கான சிகிசைகள் உரிய வகையில் வழங்கப்பட்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்டு உள்ளதாகவும், அவர்களை தொடர்ந்து 48 மணிநேரம் முதல் 72 மணி நேரம் வரையில் வைத்திய கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதனால் மாணவர்களை தற்போது விடுதியில் அனுமதித்து உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

விஷம் கலந்த நீரினை பருகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் பார்வையிட்டனர்

இதே வேளை ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர் தாங்கியில் விஷத்தினை கலந்தவர்கள் பாடசாலைக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் பிரதேச சபைக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நோக்குடனையே இதனை செய்து இருக்கலாம் என தற்போது ஒரு சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை மேலும் தெரிவிக்கையில், விஷத்தினை கலந்தவர்கள் கை தவறி விஷ போத்தலை நீர் தாங்கிக்குள் விழுத்தி இருக்கா விடின் , அனைவரும் இன்றைய தினம் பிரதேச சபையின் மீது குற்ற சாட்டை முன் வைத்து இருப்பார்கள். பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து இருப்பார்கள் பிரதேச சபையே விஷம் கலந்த நீரினையே மாணவர்களுக்கு வழங்கியது எனவும் பிரதேச சபையால் வழங்கப்படும் நீர் பாதுகாப்பு அற்றது என்ற ரீதியில் மக்களை பிரதேச சபைக்கு எதிராக திசை திருப்பவே மாணவர்களின் குடிநீரில் விசத்தினை கலந்துள்ளார்கள்.

எனினும் விஷ போத்தல் நீர் தாங்கியினுள் விழுந்ததால் பிரதேச சபைக்கு எதிராக மக்களை திசை திருப்பும் சதித்திட்டம் விணாகி போனதாக தெரிவித்தனர்.