நாயின் நகக்கீறலுக்குள்ளாகி நன்கு மாதங்களின் பின் குடும்பஸ்தர் மரணம்!

 நாயின் நகக்கீறலுக்குள்ளாகி நன்கு மாதங்களின் பின் குடும்பஸ்தர் மரணம்!

யாழ். ஏழாலையில் நாயின் நகக் கீறலுக்குள்ளான இளம் குடும்பஸ்தர் ஒருவர் நான்கு மாதங்களின் பின்னர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வீதியால் சென்ற நாயைப் பிடிக்க முற்பட்ட வேளையில் அது தனது காலால் கீறிவிட்டுத் விட்டு தப்பிச்சென்றுள்ளது. இதனை கவனிக்காமல் விட்ட குறிப்பிட்ட நபர் நோய்வாய்ப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு கொண்டுசென்ற போதிலும் தனியார் வைத்தியசாலை பாதிக்கப்பட்டவரை ஏற்க மறுத்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் இன்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

ஏழாலை வடக்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் கமல்ராஜ் (வயது 46) என்பரே உயிரிழந்தவராவர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, உடனடியாக இறுதிக்கிரியைகளை மேற்கொள்ளும்படி கூறி சடலம் பொதி செய்யப்பட்ட நிலையில் உறவினர்களிடம் வழங்கப்பட்டது