யாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி உள்ளது.
நானாவித மங்கள வாத்திய சகிதம் கும்பங்கள் வீதியுலா, காலை-09 மணிக்கு ஸ்தூபி கும்பாபிஷேகம், விநாயகப் பெருமான் மஹா கும்பாபிஷேகம், பகல்-09.45 மணியைத் தொடர்ந்து ஏனைய பரிவார தேவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தச தர்சனம், திருக்கதவு திறக்க திருமறைக்காடு,திருக்குறுந்தொகை ஓதல், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், ஆசியுரை, சிவாச்சாரிய சம்பாவனை, மஹா அபிஷேகம்,திரவிய அபிஷேகம், விசேட பூஜை வழிபாடு, விநாயகப் பெருமான் வீதியுலா வருதல் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை(அன்னதானம்)என்பன இடம்பெறும்.
கும்பாபிஷேக கிரியைகள் ஆலயப் பிரதம குரு சிவாகம பூஷணம் சிவஸ்ரீ தி. சோமநாதக் குருக்கள் தலைமையில் இடம்பெறும்.
இவ்வாலய கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-06 ஆம் திகதி காலை-09.15 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
நேற்று சனிக்கிழமை(09)மாலை பஞ்சமுக அர்ச்சனை வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆன்மீக செய்திகள் 10.02.2019