ஏழாலை மயிலங்காட்டில் தூக்கில் தொங்கி 7 பிள்ளைகளின் தந்தை மரணம்

ஏழாலை மயிலங்காட்டில்  தூக்கில் தொங்கி 7 பிள்ளைகளின் தந்தை மரணம்
ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி  இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
 
இன்று காலை 7.45 மணியளவில் மயிலங்ககாடு அம்மன் கோவிலில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
 
குறித்த சம்பவத்தில் 7பிள்ளைகளின் தந்தையும், 69 வயதுமான வைரமுத்து சண்முகலிங்கம் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
 
 
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
 
 
வைரமுத்து சண்முகலிங்'கம் மயிலங்காடு அம்மன் கோவிலடியில் தச்சுத் தொழில் செய்து வந்துள்ளார்.நேற்று இரவு வீட்டுக்குச் சென்று இரவு உணவு உட்கொண்டுள்ளார்.பின்னர்.காலை எழுந்து பார்க்கையில் அவர் வீட்டில் இல்லை.பிள்ளைகளும், மனைவியும் வேலைக்குச் சென்று விட்டதாக எண்ணி அவரைத் தேடவில்லை.
 
 
இருப்பினும் காலை மயிலங்காடு அம்மன் கோவிலடியால் வந்த சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக சுன்னாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
 
 
அதன்படி குறித்த இடத்திற்கு வந்த சுன்னாகப் பொலிஸார்  குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் குறித்த நபர் நீண்டகாலமாக இதயநோய் தாக்கத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.