ஏ 9 வீதியில் பேரூந்து கவிழ்ந்து ஒருவர் பலி,பலர் படுகாயம்.

வவுனியா, ஓமந்தை விளக்கு வைத்த குளம் பகுதியில்  பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.14இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. வவுனியா மருத்துவமனை தகவல்களின் படி, அங்கு 12 பேர் படுகாயமடைந்த நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஆறுமாத குழந்தை உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும்தெரிவிக்கப்படுகிறது.

புளியங்குளம், ஓமந்தை மருத்துவமனைகளுக்கும் காயமடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்