நச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம் வெளியேற்ற முடியும். இந்த செயற்பாடுகளின் போது நச்சுக்கள் முற்றாக வெளியேற்றப்படாத போது அவை உடலில் படிவடைந்து விடுகிறது. நீண்ட காலம் நச்சுப் பொருட்கள் படிவதனால் உடலின் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
நச்சுக்களை வெளியேற்றுதல் என்றால் என்ன?
உயிருள்ள பொருட்களில் இருந்து உடலிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றும் செயற்பாடு இதுவாகும்.
நச்சுக்களை வெளியேற்றும் சில முறைகள்?
அல்ககோல் நச்சுக்களை நீக்குதல்.
அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்களின் உடலில் இருந்து அல்ககோலை வெளியேற்றும் செயற்பாடு ஒரு வகையான நச்சுக்களை விரட்டும் முறையே.
மருந்துகளின் நச்சுக்களை விரட்டுதல்.
போதை மருந்துகளிற்கு அடிமைப்பட்டு இருப்பவர்களின் உடலில் அந்த மருந்துக்களும் அதன் தாக்கமும் இருப்பதனால் அதனை வெளியேற்றுவதற்கான சிகிச்சை முறையாகும்.
மெட்டபோலிக் நச்சுக்களை போக்குதல்.
அன்றாடம் உடலினுள் செல்லும் நச்சுக்களை மெட்டபோலிக் செயற்பாடு மூலம் நீக்குகின்றது.
எமது உடல் இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்றுவதற்கு ஏற்றவாறு இதில் உடலில் காணப்படும் பல உறுப்புக்கல் இந்த செயற்பாட்டில் ஈடுபடுகின்றது..
தினமும் இரண்டு வேளைகளாவது உணவுக் கழிவுகல் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றது. அத்துடன் ஆரோக்கியமான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சி, குடிப்பழக்கம், தியானம் செய்தல் போன்றவையும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவும்.
கிச்சடி என்றால் என்ன?
கிச்சடி என்றால் அரிசி, பருப்பு, சுவையூட்டிகள் பயன்படுத்தி சமைக்கும் சுவையான் உணவு இதுவாகும். இது வயிற்றின் ஆரோக்கியத்தில் அதிக பங்களிப்புச் செய்கிறது.
கிச்சடியினால் கிடைக்கும் நன்மை என்ன?
அரிசி:
இது உடலிற்கு சக்தியைத் தருவதுடன், இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை சீராக்குதல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கழிவுகளை வெளியேற்றுதல், சரும ஆரோக்கியத்தில் பங்கெடுத்தல் என பல நன்மைகளைச் செய்கிறது.
பருப்பு:
பருப்பு மிகவும் ஆரோக்கியமான உணவு இது இலகுவாக சமிபாடடைவதுடன் கொழுப்பை குறைக்கும் நார்ப் பொருட்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இதில் விட்டமின் பியும், புரோட்டினும் உள்ளது.
சுவையூட்டிகள்:
சுவையூட்டியால் சமிபாட்டை மேம்படுத்துவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
நச்சுக்களை வெளியேற்றும் கிச்சடி வகைகள் சில:
பாசிப்பருப்பு கிச்சடி:
2/3 கப் அரிசி, 1/3 கப் அரிசி எடுத்து 2 அல்லது 3 தடவைகள் வரை நன்றாக கழுவி பிறஸர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள், உப்பு, எண்ணெய் அல்லது நெய் மற்றும் சிவப்பு மிளகாய் பவுடர் சேர்த்து 4 விசில் வரும் வரை சமைக்க வேண்டும். இதனால் சுவையான கிச்சடி தயாராகும். இது உடலின் நச்சுக்களை விரட்டுவதற்கு உதவுகிறது.
எல்லா கிச்சடிகளும் சமைப்பது ஒரே மாதிரி, ஆனால் ஒவ்வொன்றுக்கும் சேர்மானங்கள் வேறுபடும்.
சவ்வரிசி கிச்சடி.
இந்து மதத்தினர் விரத நாட்களில் சவ்வரிசி, உருளைக்கிழங்கு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிச்சடி தயாரித்து உண்பார்கள். இதில் அதிகளவான விட்டமின் சி, கனியுப்புக்கள், மாபொருட்கள் காணப்படுகின்றது.
சிந்தி கிச்சடி:
இது பச்சைப் பயறு, பெருங்காயம், மஞ்சள், சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும். இதனை பலரும் காலை உணவாக உட்கொள்வார்கள்.
கம்பு கிச்சடி:
கம்பில் தயாரிக்கும் கிச்சடி உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவும். இதில் அதிகளவான பொஸ்பரஸ், நார்ப் பொருட்கள், புரோட்டின் காணப்படுவதனால் இலகுவாக சமிபாடடைவதுடன், அதிகளவு சக்தியும் கிடைக்கின்றது.
குத்து கிச்சடி:
குத்து கிச்சடி உட்கொள்வதனால் கொழுப்பின் அளவு, இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். இதில் அதிகளவான நார்ப் பொருட்கள், புரோட்டின், விட்டமின்கள், கனியுப்புக்கள் காணப்படுவதனால் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
காய்கறி கிச்சடி:
காய்கறி கிச்சடியில் அதிகளவான காய் வகைகள் இருப்பதனால் உடலிற்குத் தேவையான விட்டமின்கள், கனியுப்புக்கள் நார்ப்பொருட்கள், அண்டிஒக்ஸிடன் கிடைக்கும்.
கடலைப் பருப்பு கிச்சடி:
கடலைப்பருப்பு கிச்சடியில் பச்சை பட்டாணி. காஃலிபிளவர், உருளைக்கிழங்கு, ஏலக்காய், கராம்பு, இலவங்கம் போன்றவற்றைச் சேர்த்து சுவையானதும் ஆரோக்கியமானதுமான கிச்சடி தயாரிக்கலாம்.
சோளம் கிச்சடி:
சோளம் கிச்சடியில் அதிகளவான அண்டிஒக்ஸிடன், நார்ப் பொருட்கள் இருப்பதனால் இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு குறைவடைவதற்கு இது உதவுகிறது.
சிவப்பு அரிசி கிச்சடி:
சிவப்பு அரிசி கிச்சடியில் அதிகளவான அண்டிஒக்ஸிடன், நார்ப்பொருட்கள், விட்டமின், கனியுப்புக்கள் இருப்பதனால் சமிபாட்டுத் தொகுதியின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
கிச்சடி இலகுவாக நச்சுக்களை விரட்டிவதனால், வேறுபட்ட சுவையில் கிச்சடியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
மருத்துவச்செய்திகள் 02.02.2019