கச்சாய் தெற்கில் திருடர்கள் கத்திக்குத்து கணவன் மனைவி காயம்

கச்சாய் தெற்கில் திருடர்கள் கத்திக்குத்து கணவன் மனைவி காயம்

கச்சாய் தெற்கில்  இடம்பெற்ற திருட்டு முயற்சி ஒன்றின் போது முதியவர்களான கணவன் மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகினர். 

இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை (வயது 63) ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கத்திகள், பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து திருட முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கூக்குரலிட்டுள்ளனர்.   இதன் போது வீட்டில் இருந்த முதியவர்களான கணவன் மனைவி ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கி விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர் அந்த நபர்கள். சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.