காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.
தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியுமா? என நண்பியிடம் கேட்க விரும்பிய அவர், இதனைக் கடலுக்கு அடியில் கேட்க முடிவு செய்துள்ளார்.
அதற்கேற்றால்போல் காதல் கடிதம் ஒன்றை எழுதிய அவர், அக்கடிதத்தை பெண் தோழியிடம் காட்டி விட்டு பையிலிருந்து மோதிரத்தை எடுத்துள்ளார். அச்சமயத்தில் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.
அவரது பெண் நண்பியான கெனிஷா தன் வாழ்வில் மகிழ்ச்சியான ஒருநாள் துயரத்தில் முடிந்து விட்டதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்கியிருந்த மாண்டா ஹோட்டல் நிர்வாகம், "நாங்கள் கவலையின் விளிம்புக்கே சென்று விட்டோம்" எனக் கூறியுள்ளது.
வெளிநாட்டுச்செய்திகள் 23.09.2019