கடும் மழையுடனான காலநிலை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்!

கடும் மழையுடனான காலநிலை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்!

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் மழையுடனான காலநிலை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைவரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கே ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, தென் மாகாணங்களில் மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பு வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி தெரிவித்தவை வருமாறு:- சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர்கிறது.

அடுத்துவரும் 36 மணித்தியாலயங்களுக்கு இந்த நிலை தொடர வாய்ப்புள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னரே மழை குறைவடையும் சாத்தியம் உள்ளது. ஏனைய மாகாணங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமுள்ளன.- என்றார்.