கட்டுவன் பகுதியில் உள்ள கிணறுகளிலும் கழிவு ஒயில்

கட்டுவன் பகுதியில் உள்ள கிணறுகளிலும் கழிவு ஒயில்

சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் பரவி வரும் கழிவு ஒயில் கலப்பு தற்போது கட்டுவன் பகுதியில் உள்ள கிணறுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எற்கனவே கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது சுன்னாகம் கடந்து மல்லாகம் நீதிமன்ற சுற்றாடல் வரை பரவிய நிலையில தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரியினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடை பெற்று வரும் இந்நிலையில் தற்போது புதிதாக கட்டுவன் பகுதியில் உள்ள கிணறுகளிலும் கழிவு ஒயில் கலக்கின்றமை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுத்தமான நீா் இல்லாமையை அனுபவிக்கும் நிலைமை  ஏற்பட்டுள்ளது.

கிணறுகளில கழிவு ஒயில் கலப்பதினால் பொது மக்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய விவசாய நடவடிக்கைகளும் ஏனைய செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டு செல்லும் நிலமையும் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.