யாழ்.கந்தரோடை முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பரிதாப மரணம்

யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை நசுங்கி பலியானது.

இந்த பரிதாபச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்றது.

இதில் ரமேஸ் பிரியங்கா(வயது -02) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது சுவர் இடிந்து விழுத்தது என்றும், சிறுமியின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.