கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று நிறைவு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று நிறைவு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று நிறைவடையவுள்ளன. 

 
இதேவேளை பரீட்சை நிறைவடைந்ததும் அந்த பகுதியில் தேவையற்ற விதத்தில் நிற்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
பரீட்சை முடிந்ததும் பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்பட்ட பாடசாலைகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பற்றி பரீட்சைகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.