கழிவு எண்ணெய் நச்சுநீர்ப் பொருட்களால் நோய்கள் பரவும் அபாயம்

கழிவு எண்ணெய் நச்சுநீர்ப் பொருட்களால் நோய்கள்  பரவும் அபாயம்

சுன்னாகத்தில் பரவியுள்ள கழிவு எண்ணெயில் நச்சுப் பொருட்கள் காணப்படுவதாகவும் அவற்றின் மூலம் தோல்நோய், புற்றுநோய், கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படும் என எச் சரித்துள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி எஸ்.பாலகுமாரன் கழிவு எண்ணெய் கலந்த நீரினை குடிநீராக பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதில் கவனம் செலுத்தாவிட்டால் சந்ததியூடாக நோய்கள் கடத்தப்பட்டு எதிர்காலத்தில் குழந்தைகளினை பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

150 கிணறுகளில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வில் 109 கிணறுகளில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள் ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வலிகாமம் நீர்ப்படுக்கையில் கழிவு எண்ணெய் கலந்து குடிநீர் ஊடாக மக்களினை அடைந்து வருகின்றது.

கழிவு எண்ணெய் நீர்மூலம் மட்டுமல்லா மல் இந்த மண் விவசாய நிலமாக காணப்ப டுவதனால் பயிர்களின் மூலம் உணவுச்சங்கிலியூடாக கழிவு ஒயிலில் காணப்படுகின்ற காபன் கள்  மக்களினை அடைய வாய்ப்புண்டு.

விலங்குகள், பால், விவசாய உற்பத்திகள் மூலமும் மக்களினை இவ் நச்சுப் பொருட்கள் சென்றடையும். இதனால் இங்கு மட்டுமல்ல இப் பொருட்கள் உபயோகிக்கப்படுகின்ற இட ங்களிலும் பாதிப்பு ஏற்படலாம்.

கழிவு எண்ணெய்யில் காணப்படுகின்ற பெற் என்கின்ற இரசாயனம் தோல் நோய், புற்று நோய் போன்ற நோய்களும் ஐதரோக் காபன்கள் நரம்பு மண்டலம், சிறுநீரகம், ஈரல் போன்றவற்றிலும் பாதிப்புக்களை ஏற்படுத் தும். இது மட்டுமன்றி கர்ப்பப்பைகளிலும் பிறக் கப் போகின்ற குழந்தைகளிலும் பாதிப் பினை ஏற்படுத்தும்.

இப் பிரச்சினை குடிநீரினை மட்டும் தந்து விட்டால் தீர்த்து விடமுடியாது. ஜி.பி.ஆர் ஸ்கான் செய்யப்பட்டு கழிவு எண்ணெய் எங்கு கலக்க ப்பட்டுள்ளது என்பது அறியப்படல் வேண் டும்.

அதன் பின்னர் அக் கழிவு எண்ணெய் படலம் முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் தான் குடிநீர், விவசாயம் உட்பட ஏனைய தேவைகளிற்கு பயன்படுத்த முடியும் என்றார்