கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம்
கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலி.தென்மேற்குப் பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் நேற்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
நேற்று முன் தினம் வியாழக்கிழமை முதல் நேற்றுக் காலைவரை வழங்கப்படா திருந்த குடிதண்ணீர் விநியோகம் நேற்று மதியத்துடன் வழமைக்குத் திரும்பியுள்ளது.
 
வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் சுதுமலை வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அந்தப் பகுதிகளில் குடிதண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வலி.தென்மேற்குப் பிரதேச சபை குடிதண்ணீர் வழங்கிவருகின்றது.
 
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை திடீரென பிரதேச சபையினால் குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மக்கள் பலத்த அசெளகரியங்களை எதிர்கொண்டனர். பிரதேச சபையின் குடிதண்ணீர் பவுசரைச் செலுத்தும் சாரதி சுகவீனம் காரணமாக வரவில்லை. இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர், நேற்றையதினம் பிரதேச சபையின் வேறு ஒரு உப அலுவலகத்திலிருந்து சாரதி ஒருவரை மாற்றி, குடிதண்ணீர் விநியோகப் பணிக்கு நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.
 
இதேவேளை, தற்போது வெயில் காலம் ஆரம்பித்துள்ளமையினால், குடிதண்ணீர் போதாமல் இருப்பதா கவும் எனவே, தாங்கிகளை கூடுத லாக வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்