கிணற்றில் தவறி விழுந்த மாணவி காப்பாற்றப்பட்டார்

கிணற்றில் தவறி விழுந்த மாணவி காப்பாற்றப்பட்டார்

குளிக்கச் சென்ற பாடசாலை மாணவி கிணற்றினுள் தவறி விழுந்தநிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடிகாமம், கச்சாய் பகுதியில் இடம்பெற்றது. பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவி குளிக்கச் சென்றசமயம் கிணற்றில் தவறிவீழ்ந்தார் என்றும், அயலவர்களின் உதவியோடு மீட்கப்பட்ட மாணவி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.