கிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்

கிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்

கிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு ஐ.ஓ.எம் எனப்படும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியுடன் சகல வசதிகளுடனும் கூடியதாக இந்தப் பால் உற்பத்தி நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

கரைச்சிப் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ச.சந்திரசேகரத்தின் தலைமையில் நேற்று நடைபெற்ற இக்கட்டிடத்தின் திறப்பு விழாவில், பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கௌரவ விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசிகரன், ஐ.ஓ.எம் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி வ.வரதாபரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.