குப்பிழானில் புதிய நாகதம்பிரானுக்கு மஹாகும்பாபிஷேகம்

குப்பிழானில் புதிய நாகதம்பிரானுக்கு  மஹாகும்பாபிஷேகம்

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார்  கெளரியம்பாள் ஆலய வெளிவீதியில் அமைக்கப்பட்ட புதிய நாகதம்பிரான் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை(08) காலை-09 மணி முதல் 09.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது.


இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெறுமென கன்னிமார் கெளரியம்பாள் தேவஸ்தான பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

ஆன்மீக செய்திகள் 07.04.2019