கும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு

கும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு

வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு எதிர்பார்த்த வரன்கள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.

கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன் பொருள் சேர்க்கையும் அமையும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.


குடும்ப பொருளாதார நிலை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.


  

உத்தியோகம்
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும்.

தொழில் வியாபாரம்
பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். புதிய கிளைகளை நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகளும் தீர்வடையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.


அரசியல்
பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்களும் பெருகும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

பெண்கள்
உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவிகள்
மாணவ- மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

ஆன்மீக செய்திகள் 12.04.2019

ஆன்மீகச்செய்திகள்

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்

தமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..!யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...

இன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019

சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும்   அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா  14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு  அருள்பாலிக்கும்  அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா  பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...

புத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்

புத்தூர் ஞானவைரவர்  தேவஸ்தான இறுதி நாளான  தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும்  மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள்  இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...

வீட்டில் பணப்பிரச்சனையா..? இந்த பரிகாரத்தை செய்தால் போதும்

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...

கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்

இலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...

செம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் "108" பானைப் பொங்கலும்  இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019

யாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

இலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு

உலக சந்தையில் இலங்கை கறுவாவுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இலங்கை கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது.இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு...

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான...

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்!

தனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...

வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்

சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...

யாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்!!

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...

மிருசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்

யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...

யாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்

வீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...

கால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்!!

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...

விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...

கொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி!

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...

பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...

சுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

1 | 2 | 3 | 4 >>