குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப் பல போராட்டங்களை சந்திந்துவந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.

இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். 2ம் இடத்தில் வருகைதரும் குருபகவான் குடும்ப சுகஸ்தானத்தில் வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகப்போகிறது. பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேருவர். உங்கள் பேச்சிக்கு அனைவரும் கட்டுப்பட்டு மரியாதை அளிப்பர்.

புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனையில் யோகம் உண்டாகும். வீடு கட்டுதல், இடம் வாங்குதல், பிளாட் வாங்குதல் போன்றவை சிறப்பாக அமையும். திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் காலகட்டமிது.தொழில் ஸ்தானத்தில் இருந்த மந்தநிலை மாறும். போட்டிகளை சாதுரியமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். முற்றுப்பெறாமல் நீடித்துக்கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகிவிடுவார்கள். மனத் தடுமாற்றங்கள் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.தவணை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும், சோதனையும் தீர்ந்து வாழ்க்கையில் உயர்வைக் காணப்போகிறீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். கடந்த ஆறு வருடமாக எதையெல்லாம் இழந்தீர்களோ அதையெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியில் பெறப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்கள் முயற்சிகளைச் சற்று தீவிரப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வியாபாரிகளுக்கு:கூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்துகொள்ளுங்கள் மற்றபடி போட்டியாளர்களின் தொல்லைகள் இருக்காது. அதோடு தொழில் ரகசியங்களையும் நீங்கள் அறிய வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் குருப்பெயர்ச்சியினால் கொடுக்கல், வாங்கலில் படிப்படியான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு:முயற்சிகளின் அளவுகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். விளைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். அதேநேரம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். மாற்றுப் பயிர்களை ஊடு பயிராகப் பயிரிடவும். புதிய குத்தகைகளை இந்தக் காலங்களில் எடுக்க வேண்டாம்.


அரசியல்வாதிகளுக்கு:இந்தக் குருப்பெயர்ச்சியில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். அதோடு புதிய பொறுப்புகளையும் கொடுத்து உங்கள் திறமையைச் சோதிக்கும் அதனால் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி நற்பெயரைச் சம்பாதிக்கவும்.

கலைத்துறையினருக்கு:புதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்தபின்னரே செயல்படுத்தவும். உங்களின் சொற்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். மேலும், வேலையில் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கவும். கலைப்பயணங்களைச் செய்து நல்ல வருமானத்தையும் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு:சிலநேரங்களில் மனக்குழப்பங்களும், கவலைகளும் உண்டாகலாம். அதேசமயம் உடனுக்குடன் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.

மாணவமணிகளுக்கு:படிப்பில் முழுமையாக ஈடுபடவும். உங்கள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உடனுக்குடன் பலனளிக்கும்.பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானைத் தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.


ஆன்மீக செய்திகள் 02.11.2019

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய ராசி பலன் 09.02.2019

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.ரிஷபம் இன்று எந்த...

இன்றைய ராசி பலன் 08.02.2019

மேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள்...

யாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08.02.2019) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17...

இன்றைய ராசி பலன் 06.02.2019

மேஷம் இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.ரிஷபம் இன்று உற்றார் உறவினர் வருகையால்...

இந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…

அன்பு காட்டுவது, அக்கறை செலுத்துவது, உணர்ச்சிகளை காட்டுவது போன்றவைதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து காட்டும். சிலருக்கு இந்த குணங்கள் பிறவியிலேயே இருக்கும், சிலர் தங்கள் அனுபவம் மூலம் இந்த குணங்களை பெற்றிருப்பார்கள். இதற்கு நேரெதிராக சில ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள்...

இன்றைய ராசி பலன் 04.02.2019

மேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.ரிஷபம் இன்று எந்த காரியத்தை...

இன்று சனி மஹா பிரதோஷம்… எப்படி சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்..?

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக...

இன்றைய ராசி பலன் 02.02.2019

மேஷம் இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.ரிஷபம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன்...

இன்றைய ராசி பலன் 01.02.2019

மேஷம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு...

வரப்போகிறது குருப்பெயர்ச்சி… 2019 இல் எந்தெந்த ராசிக்கு ராஜயோகம் ?

ஜோதிடத்தில் நம்முடைய ஜாதகத்தில் உள்ள வியாழன் கிரகத்தை குரு அல்லது பிரகஸ்பதி என்று அழைப்பார்கள்.குரு என்னும் கிரகம் ஒவ்வொரு இராசியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை உடையது.வியாழன் கிரகமானது ஒருமுறை சூரியனைச் சுற்றி வர கிட்டதட்ட பன்னிரெண்டு வருடங்கள் ஆகும். ஆகையால் இக்கிரகம் ஒவ்வொரு...

<< 10 | 11 | 12 | 13 | 14

செய்திகள்

யாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...

யாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...

யாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி

யாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.    இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...

யாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...

வவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...

யாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...

கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை

கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி

டென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...

யாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி

யாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

1 | 2 | 3 | 4 | 5 >>