குரும்பசிட்டி பகுதியில் வாகனம் மோதி சிறுவன் படுகாயம்

குரும்பசிட்டி பகுதியில் வாகனம் மோதி  சிறுவன் படுகாயம்

யாழ். புன்னாலைக்கட்டுவன் குரும்பசிட்டி பகுதியில் விமானப்படையின் வாகனம் மோதி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (05) ஏழாலை தெற்கைச் சேர்ந்த திருநாவுக்கரசு சுஜீவன் (வயது 16) படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (06) தெரிவித்தனர்

.சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விமானப்படையின் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.