கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாலதி கலையகம இனம் தெரியோதாரால் எரிப்பு

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாலதி கலையகம இனம் தெரியோதாரால் எரிப்பு

யாழ்,கொக்குவில் இந்துக் கல்லுாரியின் விளையாட்டு மைதானத்திற்குள் இருக்கும் மாலதி கலையரங்கு விசமிகள் சிலரால் இன்று அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெறுமதிவாய்ந்த பல விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கட்டடமும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த கட்டடம் மின் ஒழுக்கினால் தீப்பற்றி எரிந்ததாக பாடசாலை நிர்வாகம்  தெரிவித்த போதும் அக் கட்டடத்திற்கு மின் துண்டிக்கப்பட்டு ஒரு மாதங்கள் ஆகி விட்டதாகவும் தெரியவருகின்றது.

கொக்குவில் இந்துக்கல்லுாரியின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் போதும் சில மாணவர்கள் கடும் மது போதையில் அங்கு தகராறுகள் புரிந்ததும் குறிப்பிடத்தக்கது