கொடிகாமம் பஸ்சில் கொள்ளையடிக்க முயன்ற நான்கு பெண்கள் கைது

கொடிகாமம் பஸ்ஸில் பயணித்த 44 வயதுடைய பெண்ணின் கைப்பையில் இருந்த 14 அயிரம் ருபா பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் 3 இளம் யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கொழும்பு ஆமர் வீதி மற்றும் மானிப்பாய் வீதி கொடிகாமத்தினைச் சேர்ந்த 22, 23, 24 வயதுடைய யுவதிகளே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலைக்கு சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது அருகில் நின்ற 3 யுவதிகள் பணத்தினை திருடியுள்ளனர்.இந்த நிலையில் பணத்தினை திருட்டுக் கொடுத்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய பின்னர் கைப்பையினை பார்த்த போது பணம் திருடப்பட்டுள்ளமையினைக் கண்டு ஊடனடியாக ஆட்டோவில் கொடிகாமம் பஸ்ஸினை பின்பற்றி சென்று பஸ்ஸினை மறித்து 3 பெண்களையும் விசாரணை செய்ததுடன், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.அந்த முறைப்பாட்டின் பிரகாரம் 3 யுவதிகளும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.