கோண்டாவில் பகுதியில் கடை உடைத்து பெறுமதியான பொருட்கள் திருட்டு

கோண்டாவில் பகுதியில் கடை உடைத்து  பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை (02) இரவு திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரால் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் கூரை வழியாக நுழைந்த திருடர்கள், கடை மற்றும் பின்னாலுள்ள களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள், சிகரெட் பண்டல்கள், பால்மா வகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து, கடையில் காணப்பட்ட கைவிரல் அடையாளங்களை பதிவு செய்துள்ளதாகவும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.