கோண்டாவில் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலை முயற்சி

கோண்டாவில் பகுதியில்  பிரபல  பாடசாலை மாணவி தற்கொலை முயற்சி

தான் எதிா்பாா்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்பதற்காக யாழில் பிரபல பெண்கள் பாடசாலை மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அயலவா்கள் மற்றும் உறவினா்களால் காப்பாற்றப்படடுள்ளாா்.

நேற்று இரவு 9 மணயளவில் கோண்டாவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தான் தெரிவு செய்த குறித்த பீடம் ஒன்றிற்கு தனது பெறு பேறு காணாது போய்விட்டதால் வீட்டில் அழுது கொண்டு இருந்துள்ளாா்.

இவருக்கு சிறந்த பெறுபேறு கிடைக்கும் என்று பாடசாலை ஆசிரியா்களும் பெற்றோரும் எதிா்பாா்த்திருந்தாகவும் இருப்பினும் குறித்த துறைக்கு பெறுபேறு காணமால் போயிருந்தாலும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் அளவுக்கு பெறுபேறு கிடைத்ததாகவும் தெரியவருகின்றது. இதைப் பெற்றோா் தெரிவித்து ஆறுதல் கூறியும் மாணவி அதைக் கேளாது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். அயலவா்களும் பெற்றோா்களும் எடுத்த முயற்சியால் மாணவி உயிா்தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.