கோண்டாவில் பிள்ளையார் கோபுரத்தின் மீது விழுந்த இடி

கோண்டாவில் பிள்ளையார் கோபுரத்தின்  மீது விழுந்த இடி

யாழ்,கோண்டாவில், கே.கே.எஸ் வீதி, உப்புமடப்பிள்ளையார் கோயிலின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இடி வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்தார். மணிக்கூட்டுக் கோபுர கலசமும் பிள்ளையார் சிலையும் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இன்றுபிற்பகல் இடியுடன் கூடிய மழை யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பொய்தது. இதன்போது உப்புமடப்பிள்ளையார் கோயிலின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இடிமின்னல் தாக்கியதில் மணிக்கூட்டுக்கோபுரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.

ஆலய சூழலில் நின்றிருந்த ஒருவரும் இதன்போது சிறு காயமடைந்தார்.