சாராயக் கடைக்குள் நின்றவரைக் கடத்தி மொட்டையடித்து தாக்கிய மர்ம நபா்கள்

 சாராயக் கடைக்குள் நின்றவரைக் கடத்தி மொட்டையடித்து தாக்கிய மர்ம நபா்கள்
யாழ்.உடுப்பிட்டி இமையாணன் பகுதியினைச் சோர்ந்த செல்வராசா தினேஷ் (24) என்பவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி திங்கட்கிழமை (07) மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தனர்.

மேற்படி நபர் மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி நபரைத் தூக்கிச் சென்று பருத்தித்துறைக் கடற்கரையில் வைத்து அவருக்கு மொட்டை அடித்துள்ளனர்.

தொடர்ந்து அவரை சவரக்கத்தியினால் வெட்டியதுடன், தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். >