சாவகச்சேரி, பகுதியில் நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்பு

சாவகச்சேரி, பகுதியில்  நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்பு

யாழ்.சாவகச்சேரி, கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்னுக்குள் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட 23 வயது யுவதியும், 45 வயது ஆண் ஒருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

 

இவர்களில் யுவதி சிகிச்சை பயனின்றி சாவகச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றையவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரெத்தினம் நித்தியமலர் (வயது-23) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 ) என்பவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த ஆலயத்துக்கு சென்ற பொலிஸார் இருவரையும் மீட்டு சாவகவ்வேரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.