சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும்:

சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும்:

புகைப்பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 22 ஆயிரம் பேரிடம் பக்கவாதம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவர்களில் 23 சதவீதம் பேர் சிகரெட் புகையை சுவாசித்தவர்கள். பக்கவாதத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றை கழித்துவிட்டு பார்க்கும்போது புகை பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் காற்று மாசு, சுற்றுச்சூழல் மாறுபாடுகள் போன்றவைகளுக்கும் பாக்கவாதத்திற்கும் இடையேவுள்ள தொடர்புகள் பற்றி வருங்காலத்தில் ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.