சிரியாவில் பாடசாலையில் குண்டு வெடித்ததில் 41 குழந்தைகள் பலி

சிரியாவில் பாடசாலையில் குண்டு வெடித்ததில் 41 குழந்தைகள் பலி

சிரியாவின் கோம்ஸ் சிட்டியில் அரசுப் பள்ளியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் பலியாகினர் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் சீர்குலைந்துள்ள சிரியாவின் கோம்ஸ் சிட்டியில் பள்ளி குழந்தைகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் மாணவர்கள் கல்வி பயின்றபோது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டுவெடிப்பில் சுமார் 41 பிஞ்சு குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், பல மாணவர்களை காணவில்லை என்று சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காயம் அடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

பள்ளியில் ஒரு தீவிரவாதியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளான் என்று கூறப்படுகிறது. ஒரு குண்டை பள்ளியில் வைத்துவிட்டு மற்றோரு குண்டை அவனே வெடிக்க செய்துள்ளான். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கம் ஒன்று இப்பகுதியில் பல்வேறு முறை இரட்டை குண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். தற்கொலை குண்டுவெடிப்புகள் குழந்தைகள் பலர் பலியாகியுள்ளனர்.