சிறப்பாக நடைபெற்ற யாழ். நல்லூர் கந்தனின் மாம்பழத் திருவிழா

சிறப்பாக நடைபெற்ற  யாழ். நல்லூர் கந்தனின் மாம்பழத் திருவிழா

வடபுலத்தின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய மகோற்சவத்தின் 22 ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துன் ஆரம்பமாகிய நல்லூர்க் கந்தன் மகோற்சவத்தின் 22 ஆம் திருவிழா இன்று நடைபெற்று வருகின்றது.

இதில் மாம்பழத் திருவிழா காலையில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன் போது பெருமளவான அடியவர்களின் அரோகரா கோசத்துடன் முருகப்பெருமான் மற்றும் பிள்ளையார் வெளிவீதி உலா வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை ஒருமுகத் திருவிழாவும் நடைபெறவுள்ளது