சிறுப்பிட்டி, நீர்வேலி உட்பட பல பிரதேசங்களில் மழையால் வெங்காயச் செய்கை பாதிப்பு

சிறுப்பிட்டி, நீர்வேலி உட்பட பல பிரதேசங்களில் மழையால் வெங்காயச் செய்கை பாதிப்பு

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும்  பெய்துவரும் பருவமழையினால் வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
 விதை வெங்காய உற்பத்திக்காக மேட்டுநில வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த  அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூர், சிறுப்பிட்டி, நீர்வேலி போன்ற பிரதேசங்களில் வாழும் விவசாயிகளின் வெங்காயத் தோட்டங்களே தொடர் மழை காரணமாக முழுமையாக அழிவடைந்துள்ளன.
 
மேலும் வெங்காயச் செய்கையில் ஏற்பட்ட இவ்அழிவு நிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் விதை வெங்காயத்தின் விலை அதிகரிக்கலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.