சிறுப்பிட்டியில் சைவப்பா நினைவுப் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது

சிறுப்பிட்டியில் சைவப்பா  நினைவுப் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமூகப் பணியாளரும், ஆலயத் தொண்டரும், கூட்டுணர்வாளருமாகிய அமரர். தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் அந்தியேட்டியை முன்னிட்டு அவரால் சிறுப்பிட்டி சூரியோதய பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளைக்காக நில நன்கொடையை மனமுவந்தளித்ததன் முகமாக வலி கிழக்கு(வ.ப) பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி நிர்வாகத்தினரால் சிறுப்பிட்டி சூரியோதய பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளையில் 19-02-2016 இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் நினைவுப் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அன்னாரின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டதுடன் எமது கிராம மக்களும் பிரமுகர்களும் பூமகள்முன்பள்ளி மழலைகளும் ஆசிரியர்களும் இணைந்து அன்னாரின் ஆத்ம சாந்தியடையப் பிரார்த்தித்தனர்.