சிறுப்பிட்டி பகுதியில் வாழைக்குலை திருடமுற்பட்ட மூவர் கைது

சிறுப்பிட்டி பகுதியில் வாழைக்குலை திருடமுற்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் வாழைக்குலைகளை திருடமுற்பட்ட திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மூவரை வெள்ளிக்கிழமை (28) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் சனிக்கிழமை (29) தெரிவித்தனர்.

மேற்படி மூவரும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் வந்து வாழைக்குலைகளை கொள்வனவு செய்து விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை (28) சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலைகளை திருடமுற்பட்டுள்ளனர்.இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மூவரையும் கைது செய்ததுடன், வடி ரக வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவனின் வாசஸ்தலத்;தில் சனிக்கிழமை (29) ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் -