சிறுப்பிட்டி பூமகள் கற்கை மையத்தில் நடைபெற்ற ஏடு தொடக்கும் நிகழ்வு.(படங்கள் இணைப்பு )

சிறுப்பிட்டி பூமகள் கற்கை மையத்தில்  நடைபெற்ற ஏடு தொடக்கும் நிகழ்வு.(படங்கள் இணைப்பு )

சிறுப்பிட்டி பூமகள் கற்கை மையத்தில் இன்று ஏடு தொடக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் பூமகள் கற்கை மையத்தில் மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கு அகரம் தொடக்கி உயிர் மெய் எழுத்துக்கள் கற்றுக் கொடுப்பதோடு விளை நெல்லில் விரல் பிடித்து எழுதியும் காண்பிக்கப்பட்டது.
பூமகள் நற்பணி மன்ற உறுப்பினர் திரு. இரஞ்சித் ஆசிரியர் சிறுவர்களின் பிஞ்சு விரல் பிடித்து முதற்கல்வியை ஆரம்பித்துவைத்தார். இந் நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த பூமகள் நற்பணி மன்ற செயலாளர் திரு. சத்தியவரதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.