சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழா.(புகைபடங்கள்)

சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளி  ஆசிரியர் தின விழா.(புகைபடங்கள்)

பூமகள் முன்பள்ளியில் ஆசிரியர் தின விழாவானது 06/10/15 காலை 9.00 மணியளவில் பூமகள் முன்பள்ளி தலைவர் திரு .இ.றஞ்சித் அவர்கள் தலைமையில் நிர்வாகத்தினரும், பெற்றோர்களு...ம், மாணவர்களும் இணைந்து இவ் விழாவை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து ஆசிரியர்களை வாழ்த்தும் முகமாக மலர் மாலை சூட்டிக்கௌரவித்தனர்.

அதனைத்தொடர்ந்து இவ் விழாவை மெருகூட்டும் முகமாக பெற்றோர்களின் ஏற்பாடாக ஆசிரியர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவ மழலைகளினால் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நினைவுப்பரிசில்கள் வழங்கி வாழ்த்தினர்.

இவ் விழாவில் எமது முன்பள்ளி செயற்பாடுகளில் அக்கறை கொண்டு செயலாற்றி வரும் மதிப்பிற்குரிய திரு.செ. சுப்பிரமணியம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அனைவருக்கும் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. இத்துடன் காலை 10.30 மணியளவில் விழாவானது இனிதே நிறைவேறியது.