சீனாவின் புதிய வகை வாகனம்.

சீனாவின் புதிய வகை வாகனம்.

தண்ணீரில் மிதக்கக் கூடியதும் நீருக்கு மேலாக பறக்கக்கூடியதுமான புதிய வகை வாகனமொன்றை சீனா தயாரித்துள்ளது. சி.வை.ஜி. 11 (CYG – 11) எனும் வாகனம், தரையிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய ஹுவர்கிராவ்ட் மற்றும் கட்டுமரம் ஆகியவற்றின் கலவை போன்று தோற்றமளிக்கிறது. ஆனால், இது உண்மையில் புதிய வகையான வான்கலமாகும். கடந்த வாரம் சீனாவின் ஹைனான் மாகாணத்தின் ஹெய்கோ கரையோரத்தில் இத்தகைய இரு சி.வை.ஜி 11 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. ரஷ்யா மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் இவ்வாகனம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

13 மீற்றர் நீளமும் 15.6 மீற்றர் அகலமும் கொண்ட சி.வை.ஜி. 11 வாகனத்தின் எடை 3,800 கிலோகிரமாகும். இரு விமானிகள் உட்பட 12 பேர் இதில் பயணம் செய்யமுடியும். அதிகபட்சமாக 1,200 கிலோகிராம் எடையை ஏற்றிச் செல்லலாம். நீருக்கு மேல் சுமார் 5 மீற்றர் உயரத்தில் இது பறந்து செல்லும். மணித்தியாலத்துக்கு 250 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பறக்கக்கூடிய இவ்வாகனம் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டால், 1,500 கிலோமீற்றர் தூரம்வரை பயணிக்கக்கூடியது. இதேபோன்று 40 பேர் பயணம் செய்யக்கூடிய வாகன மொன்றை தயாரித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் 55 முதல் 120 பேர் வரை பயணிக்கக்கூடிய வாகனமொன்றை தயாரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இவ்வாகனத்தை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.