இந்தியா தமிழ்நாட்டில் சீன மொழியில் தயாராகும் திருக்குறள்

இந்தியா தமிழ்நாட்டில் சீன மொழியில் தயாராகும் திருக்குறள்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தமிழர்களின் பெருமையினை உலகறியச் செய்யும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

மொழி பெயர்ப்பு பணிகள் யாவும் முடிவடைந்து தற்போது அச்சடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சித் துறை, கல்வி, இளைஞர் நலன் அமைச்சர் திரு.வீரமணி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாரதி தாசனின் பாடல்களும் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பணிகளுக்கு 77 லட்சத்தி 70 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் ஏற்கனவே பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.