சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று  வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 


இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. வசந்த மண்டபப்  பூஜையைத் தொடர்ந்து விநாயகர் , வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் , பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் தேருக்கு எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.

முற்பகல்-10.30 மணிக்கு முத் தெய்வங்களும் முத் தேர்களில் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் அரோகராக் கோஷம் எழுப்ப,ஆண் அடியவர்கள் ஒருபுறமும் , பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுக்க முத்தேர்களும் மெல்ல மெல்ல அசைந்தாடி வலம் வந்த காட்சி அற்புதமானது. 


ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் அடியவர்கள் பூரண கும்பம் வைத்து மங்கள விளக்கேற்றி முத்தேர்களையும் வரவேற்றனர்.

முத்தேர்களும் முற்பகல்-11.45 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தன. அதனைத் தொடர்ந்து அடியார்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.  


முத்தேர்களும் பவனி வந்த வேளையில் ஆண் அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இன்றைய முத்தேர் பவனியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களைச்  சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுன்னாகம் பொலிஸார் சிவிலுடையிலும், சீருடையிலும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அடியவர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆலயச் சூழலில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஆலய மண்டபத்தில் அடியவர்களுக்கான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஆன்மீக செய்திகள் 03.05.2019

ஆன்மீகச்செய்திகள்

பொங்கல் பானைகளால் நிரம்பிய பன்றித்தலைச்சி அம்மன் கோவில்

பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன.அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர்.ஆன்மீக...

இன்றைய ராசி பலன் 08.04.2019

மேஷம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக...

குப்பிழானில் புதிய நாகதம்பிரானுக்கு மஹாகும்பாபிஷேகம்

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார்  கெளரியம்பாள் ஆலய வெளிவீதியில் அமைக்கப்பட்ட புதிய நாகதம்பிரான் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை(08) காலை-09 மணி முதல் 09.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது. இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த...

யாழ். ஏழாலையில் நாளை சால்வை வெளியீட்டு விழா

யாழ். ஏழாலையில் நாளை சால்வை வெளியீட்டு விழாஏழாலை இந்து இளைஞர் சபையின் உத்தியோகபூர்வ சால்வை வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(07) முற்பகல்-10 மணி முதல் ஏழு கோவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி சபையின் தலைவர் சி.நிரூஜன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு...

இன்றைய ராசி பலன் 06.04.2019

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.ரிஷபம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி...

இன்றைய ராசி பலன் 05.04.2019

மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.ரிஷபம் இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும்,...

இன்றைய ராசி பலன் 04.04.2019

மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம்...

இன்றைய ராசி பலன் 03.04.2019

மேஷம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.ரிஷபம் இன்று உங்களுக்கு திடீர்...

ஆஞ்சநேயரை வழிபடுவது எப்படி?

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார்.ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம் மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில்...

இன்றைய ராசி பலன் 02.04.2019

மேஷம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.ரிஷபம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பரிதாப சம்பவம்

யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க அவதிப்பட்டவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழ்துள்ளார்.சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத்...

குண்டெறிதலில் போட்டியில் யாழ்,சண்டிலிப்பாய் வீராங்கணை முதலிடம்!

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த ஜீ.சர்மிளா தங்கப் பதக்கத்தைச் சுவீரித்துள்ளார்.யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று...

யாழ் பண்ணை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.மண்டைதீவு சந்திக்கு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.மூவர் சாட்டிக் கடற்கரைக்கு காரில் சென்று திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றது என எமது...

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி, ஒருநாள் சேவைக்காக...

யாழ்,வட்டுக்கோட்டை பகுதியில் வெடித்த இரண்டு குண்டுகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன.மதியம் ஒரு மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் கொத்ததுறையை அண்மித்த பகுதிகளான வட்டுக்கோட்டை, மூளாய், பொன்னாலை, அராலி ஆகியவற்றில்...

நாடு முழுவதும் அமுலானது பொலிஸ் ஊரடங்கு

நாடுமுழுவதும் இன்றிரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.தென்னிலங்கையில் பரவலாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, புத்தளம், குருணாகல் நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல்...

வவுனியா பகுதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி

வவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.குறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது.மின்சார ஒழுக்கே...

கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண்...

யாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்

வடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களமும், போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்புக் கடன் வழங்கு சங்கமும் இணைந்து தேங்காய் ஓட்டை மூலப் பொருளாகக் கொண்ட  கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி நெறியை யாழ். உடுவில் கலாசார மண்டபத்தில் தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளன. உடுவில்...

குழந்தையை வீதியில் தூக்கி எறிந்த தாய் யாழில் கொடூர சம்பவம்

பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. உரப்பையில் போடப்பட்டிருந்த சிசுவை நாய்கள் கடித்து குதறியபோது,வீதியால் பயணித்தவர்கள் அவதானித்து மீட்டபோது, சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் நேற்று இந்த...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை  வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி   10.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா  09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது   உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>