இணுவில் பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தில் திருட்டு

 இணுவில் பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தில் திருட்டு

சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இணுவில் கிளை உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.இணுவில் கிழக்கிலுள்ள கிளை இலக்கம் 14 ஏ என்ற கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இதனை மறுநாள் காலை அவதானித்த அப் பகுதி மக்கள் முகாமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். முகாமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொ ண்டு வருகின்றனர்.