சுன்னாகம் மருதனார்மடம் சந்தியில் கடை உடைத்து திருட்டு

சுன்னாகம் மருதனார்மடம் சந்தியில் கடை உடைத்து  திருட்டு

கொட்டும் மழையை சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் சுன்னாகம் மருதனார்மடம் சந்தியில் உள்ள கடைக்களஞ்சியத்தை உடைத்து சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பால் மாவகைகளை திருடிச்சென்றுள்ளார்கள்.

 நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம் பெற்ற இந்த திருட்டுச் சம்பவத்தினால் மருதனார்மடத்தில வியாபார நிலையத்தை நடத்தும் வியாபாரிகள் மிகவும் கதி கலங்கிப் போயுள்ளார்கள். கடந்த ஆண்டிலும் இத்தகைய திருடடு சம்பவங்கள் தொடர்ந்து நான்கு ஐந்து கடைகளில் இடம் பெற்ற நிலையில் மீண்டும் தற்போது ஆரம்பித்துள்ளமையை இட்டு கவலை அடைந்துள்ளார்கள்.மருதனார்மடம் சந்தியில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள களஞ்சியமாக பயன்படுத்தப்பட்ட வீட்டின் ஒட்டைப் பிரித்து இறங்கிய திருடாகள் அங்கிருந்த பால் மாவகைகளை திருடிச்கொண்’டு வீ{ட்டின் முன் கதவைத்திறந்து வெளியேறியுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில செய்யப்பட்டு முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டுள்ளார்கள்.