சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில் ராடர் கருவி மூலம் ஆய்வு

 சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில்  ராடர் கருவி மூலம்  ஆய்வு

வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சுன்னாகம் பகுதி நிலக்கட்டமைப்பை ஆராயும் நடவடிக்கைகள் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுன்னாம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் கழிவு ஒயில் நிலத்தில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராயும் பொருட்டு ராடர் கருவி மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட ராடர் கருவியின் உதவியுடன், தொழில் நுட்பவியலாளர்களை உள்வாங்கி வடக்கு மாகாண சபை அமைத்த நிபுணர்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.