சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



   
நிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாரா நேரத்தில் சிறுமி தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.


சிறுமியுடன் மற்றுமொருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன் பின்னர் தம்னுடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் தேடிப்பார்த்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோதும் அது பயனளிக்காத நிலையில் விசேட பயிற்சி பெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் உலங்கு வானூர்தி மூலம் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


அதன் பின்னர் குறித்த ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்தில் இருந்து சிறுமியும் மேலும் ஒரு நபரும் மீட்கப்பட்டுள்ளனர்.


மீட்கப்பட்ட உடனேயே முதலுதவிகள் வழங்கப்பட்டபோதும் குறித்த சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


மீட்கப்பட்ட மற்றுமொரு நபர் உலங்கு வானூர்தி மூலம் வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், குறித்த ஏரியில் இதுவரையில் எவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை எனவும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை எனவும அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டுச்செய்திகள் 05.08.2019

வெளிநாட்டுச்செய்திகள்

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம்...

பேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...

சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்

நல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...

24 மணி நேரத்தில்- 168 பேர் கைது

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதாகியுளளனர்.கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு...

யாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...

ஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்!!

யாழ்ப்­பா­ணம்,  பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...

வவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...

நல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.,   வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...

சாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...

தொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்

நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

திருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...

கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...

மாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்!

யாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...

நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி!

சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...

இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019

மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்

தமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..!யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...

இன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019

சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும்   அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா  14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு  அருள்பாலிக்கும்  அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா  பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...

1 | 2 | 3 | 4 | 5 >>